SELANGOR

காம்பாக்டர் மற்றும் ரோரோ லாரிகள் சேவைக்காக RM42.5 மில்லியன் செலவிடப்பட்டது

29 பிப்ரவரி 2024, 7:51 AM
காம்பாக்டர் மற்றும் ரோரோ லாரிகள் சேவைக்காக RM42.5 மில்லியன் செலவிடப்பட்டது

அம்பாங் ஜெயா, பிப் 29: இரண்டு உள்ளூர் நிர்வாகப் பகுதிகளில் வீட்டுக் கழிவுகள் மற்றும் மொத்த கழிவு சேகரிப்பு சேவைகளுக்காக KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) RM42.5 மில்லியன் செலவிட்டது.

செலாயாங் நகராண்மை கழகத்தில் (எம்பிஎஸ்) 20 யூனிட் 'ஆர்ம் ரோல்' லாரிகளுக்கு (ரோரோ) 3.5 மில்லியன் ரிங்கிட், 49 காம்பாக்டர் லாரிகளை வாங்க 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டதாக அதன் நிர்வாக இயக்குனர் கூறினார்.

"அம்பாங் ஜெயா நகராண்மை கழக (எம்பிஎஜே) நிர்வாகப் பகுதிகளில், KDEBWM RM19 மில்லியனை 44 காம்பாக்டர் லாரிகள் மற்றும் 3 ரோரோ லாரிகளின் சேவைகளுக்கு ஒதுக்கியது.

" இந்த லாரிகள் 18,000 டன் குப்பைகளை சேகரிக்கும் திறன் கொண்டுள்ளன. மேலும், எரிபொருளை சேமிக்கும் தன்மை வாய்ந்தது மற்றும் அனைத்து பகுதிகளிலும் செல்ல பொருத்தமான அளவை கொண்டுள்ளன," என்று டத்தோ ராம்லி முகமட் தாஹிர் கூறினார்.

இதற்கிடையில், புதிய ரோரோ லாரிகள் மற்றும் கம்பக்டர்களை வழங்குவதன் மூலம் 47 நிர்வாகப் பகுதிகளில் 240 டன் குப்பைகளைச் சேகரிக்க முடியும் என எம்பிஏஜே தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

"இந்த புதிய லாரி, குப்பை சேகரிப்பை மிகவும் திறமையாகவும், அட்டவணை படியும் செயல்படுத்தும்," என்று அவர் கூறினார்.

குப்பை சேகரிப்பு பிரச்சனை தொடர்பான குடியிருப்பாளர்களின் குறைகளைத் தீர்க்க இந்த வாகனம் தனது தரப்புக்கு உதவும் என யாங் டிபெர்துவா எம்.பி.எஸ் டத்தோ முகமட் யாசிட் சாய்ரி தெரிவித்தார்.

"புதிய காம்பாக்டர் மற்றும் ரோரோ லாரிகள் செலாயாங்கில் ஒரு மாதத்திற்கு 16,800 டன் குப்பைகளைச் சேகரிக்கும் தன்மையைக் கொண்டுள்ளன.

"இது 546.6 கிலோமீட்டர் (கிமீ) பரப்பளவைக் கொண்ட செலாயாங்கில் உள்ள 764,000 மொத்த மக்கள் தொகையின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.