ஷா ஆலம், பிப் 28: இந்த சனிக்கிழமை சிலாங்கூர் ஃபுரூட் வெலி (SFV) ஏற்பாடு செய்திருக்கும் ஏசான் SFV உற்சாக ஓட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளில் இரண்டு ஆடுகளும் அடங்கும்.
ஆடுகளைத் தவிர, பங்கேற்பாளர்கள் முக்கிய பரிசான RM2,499 மதிப்புள்ள மின்சார ஸ்கூட்டரை வெல்வதற்கான வாய்ப்பும் இருப்பதாக சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (PKPS) துணை நிறுவனம் தெரிவித்துள்ளது.
"மேலும், இதில் முயல்கள், சைக்கிள்கள், கைப்பேசிகள், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் ரிம200 மதிப்புள்ள டெகாத்லான் வவுச்சர்கள் ஆகியவற்றை வெல்ல வாய்ப்பு உள்ளது" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல், இந்நிகழ்வில் 1,000 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு RM40 மற்றும் 7 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு RM25 கட்டணத்துடன் விண்ணப்பம் இன்னும் திறக்கப்பட்டுள்ளது.
"பங்கேற்பவர்களுக்கு டி-சர்ட், பதக்கம் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படுவதோடு, இலவச சோளம், பருத்தி மிட்டாய் மற்றும் இளநீர் ஆகியவற்றை பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது,".
பின்வரும் இணைப்பின் மூலம் https://www.mov3on.com/event-




