SELANGOR

60 குடும்பங்களுக்குப்  பள்ளிப் பொருட்கள் வாங்குவதற்காக RM300 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டன - எம்பிபிஜே 

26 பிப்ரவரி 2024, 9:44 AM
60 குடும்பங்களுக்குப்  பள்ளிப் பொருட்கள் வாங்குவதற்காக RM300 மதிப்புள்ள வவுச்சர்கள் வழங்கப்பட்டன - எம்பிபிஜே 

ஷா ஆலம், பிப் 26: குறைந்த வருமானம் கொண்ட 60 குடும்பங்களுக்குப் பள்ளிப் பொருட்களை வாங்குவதற்காக RM300 மதிப்புள்ள வவுச்சர்களைப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி வழங்கியது.

பள்ளிக்குத் திரும்பும் ஷாப்பிங் வவுச்சர்களைப் பயன்படுத்தி பசார் ராயா பெசார் மைடின் சுபாங் ஜெயாவில் பள்ளி உபகரணங்களை வாங்க முடியும் என மேயர் கூறினார்.

"இந்த உதவி, எம்பிபிஜேவின் சமூக சேவை பொறுப்புகளில் ஒன்றாகும், இது குறைந்த திறன் கொண்ட குடும்பங்களின் சுமையை எளிதாக்குகிறது.

"பிபிஆர் கோத்தா டாமன்சாரா, லெம்பா சுபாங், பெட்டாலிங் ஜெயா செலாத்தான் (பிஜேஎஸ்) மற்றும் டேசா மெந்தாரி ஆகிய இடங்களில் வசிக்கும் இ-காசே ``eKasih`` இன் கீழ் பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்கள் நன்கொடைப் பெற்றனர்" என்று முகமட் ஜாஹ்ரி சமிங்கோன் கூறினார்.

அதே நேரத்தில், இத்திட்டத்தின் மூலம் கல்வியில் சிறந்த மனித மூலதனத்தை மறைமுகமாக உருவாக்க முடியும் என்றும் அவர் விளக்கினார்.

"கூடுதலாக, இத்திட்டம் ``Tema Strategi 2`` கீழ் முதல் சிலாங்கூர் திட்டத்தை (RS-1) ஆதரிக்கிறது. இது பாதிக்கப்படக்கூடிய குழுக்களை இலக்காகக் கொண்ட சமூக நல ஆதரவை வலுப்படுத்த உருவாக்கப்பட்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.