SELANGOR

சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார் கோப்பை விவாதப் போட்டியில் RM13,000 வெல்ல வாய்ப்பு

23 பிப்ரவரி 2024, 8:17 AM
சிலாங்கூர் டத்தோ மந்திரி புசார் கோப்பை விவாதப் போட்டியில் RM13,000 வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், பிப் 23: சிலாங்கூர் மந்திரி புசார் கோப்பை விவாத போட்டியின் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் RM13,000 பணத்தை வெல்ல வாய்ப்பு உள்ளது.

இப்போட்டி மார்ச் 8 முதல் 10 வரை நடைபெறவுள்ளது. மாநில கல்வி மற்றும் மனித மூலதன நிலைக் குழுவால் நடத்தப்படும் இப்போட்டியானது, உயர்கல்வி நிறுவனங்கள் (RM8,000) மற்றும் பிரா யூனிவெர்சிட்டி (RM5,000) என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கோலா சிலாங்கூரில் உள்ள சிலாங்கூர் தொழில்நுட்ப திறன்கள் மேம்பாட்டு மையத்தில் (STDC) நடைபெறும் இப்போட்டி, பிரிட்டிஷ் நாடாளுமன்ற அமைப்பு வடிவத்தில் நடைபெறும்.சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பதிவு படிவம் மற்றும் போட்டி நிபந்தனைகளைப் பெறலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.