ஷா ஆலம், பிப் 20: எதிர்வரும் சனிக்கிழமை செந்தோசா தொகுதியில் உள்ள மகளிரின் வணிக வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் சிறப்பு பயிற்சி திட்டத்தை செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ` ஷா ஆலமிலுள்ள ``The Lighthouse Campus சில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிகழ்வில் வருகை புரியும் முதல் 50 பெண்களுக்கு மகளிருக்கான சமூகக் காப்புறுதி திட்ட மானியம் வழங்கப்படுவதுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மலேசிய வணிக பதிவு ஆணையத்தில் இலவச வணிக பதிவும் ஏற்பாடு செய்யப்பட்டு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது தொகுதியில் முறையான வணிக பதிவின்றி சிறு வியாபாரங்கள் மேற்கொள்ளும் மக்களுக்கு அவ்வப்போது ஏற்படும் அசௌகரியங்களுக்கு தீர்வு காணவும், வணிகத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தூண்டுதல் வழங்கவும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக இந்நிகழ்வுக்கான தொடர்பு அதிகாரி கூறினார்.
பெண்களுக்கு வணிக வாய்ப்பை ஏற்படுத்தி தருவதும், நிதி கல்வியறிவு மற்றும் கூடுதல் வருமானத்தை ஈட்டுவது குறித்து தெரிவிப்பதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, இந்த வாய்ப்பை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள உடனே பதிந்து கொள்ளுங்கள், பதிவிற்கு இறுதி நாள் நாளை (21.2.2024) ஆகும்.
மேலும், https://forms.gle/




