SELANGOR

50 ரம்ஜான் பஜார் வாடகை தளங்களை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் திறந்துள்ளது

19 பிப்ரவரி 2024, 3:36 AM
50 ரம்ஜான் பஜார் வாடகை தளங்களை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் திறந்துள்ளது

ஷா ஆலம், பிப் 19: செக்‌ஷன் 7 மற்றும் செக்‌ஷன் 35இல் 50 ரம்ஜான் பஜார் வாடகை தளங்களை யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா சிலாங்கூர்) ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கு கூடாரம் உள்ளடக்கிய RM750 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தொழில் முனைவோர் இரண்டு முறை பணம் செலுத்த அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

செக்‌ஷன் 35 தில் உள்ள உணவு வளாகத்தில் 30 வாடகை தளங்களும், ஜாலான் பிளாட்டினம் F 7/F செக்‌ஷன் 7யில் மற்றொரு 20 வாடகை தளங்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) தெரிவித்தது.

ரம்ஜான் பஜார் மூலம் வருமானத்தை அதிகரிக்க விரும்பும் தொழில் முனைவோருக்கு இந்த வாய்ப்பு திறக்கப் பட்டுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் மேல் தகவல்களுக்கு 012-9937120 (வாதின்) மற்றும் 012-6493785 (நோரின்) ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ஹிஜ்ரா சிலாங்கூர் என்பது மாநிலத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு உதவ பல்வேறு நிதி திட்டங்களை வழங்கும் ஒரு நிறுவனமாகும்.

அவற்றில், ஐ-மூசிம் மூலம் RM20,000 வரையிலான மூலதனக் கடன்கள் பண்டிகை மற்றும் பழ பருவ காலத்தில் வியாபாரம் செய்யும் தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.