SELANGOR

சர்வதேச முஸ்லிம் நட்பு இணைப்பு நெட்வொர்க் (இம்ஃபான்) எப் பயன்படுத்தி தொழிலை மேம்படுத்த  900 தொழில் முனைவோருக்கு வாய்ப்பு

15 பிப்ரவரி 2024, 9:29 AM
சர்வதேச முஸ்லிம் நட்பு இணைப்பு நெட்வொர்க் (இம்ஃபான்) எப் பயன்படுத்தி தொழிலை மேம்படுத்த  900 தொழில் முனைவோருக்கு வாய்ப்பு

ஷா ஆலம், பிப் 15 : மொத்தம் 900 தொழில் முனைவோர் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த இ-வியாபார செயலி, சர்வதேச முஸ்லிம் நட்பு இணைப்பு நெட்வொர்க் (இம்ஃபான்) எப் பயன்படுத்த இலக்கிடப்பட்டுள்ளனர்.

அச்செயலி எதிர்வரும் ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஹலால் இன்டர்நேஷனல் சிலாங்கூர் (HIS) Tayyiba Sdn Bhd இன் கீழ் இந்த செயலி உள்ளூர் தயாரிப்பு பொருட்களின் சந்தையை விரிவுபடுத்தும், குறிப்பாகக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் தயாரிப்புகளின் சந்தையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

முன்பு இருந்த இம்ஃபான் தளத்தை விட இந்த செயலி வணிகர்கள் மற்றும் பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இது முன்பு இணையதளத்தில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது என அதன் பொது மேலாளர் முகமட் யாரில் ஷோகத் அலி கூறினார்.

"இம்ஃபான் அனைத்து தொழில் முனைவோருக்கும், குறிப்பாகக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், ஹலால் சான்றிதழ் வழிகாட்டுதல் உட்பட வர்த்தகர்களுக்கான பல்வேறு திட்டங்கள் போலவே தங்கள் தயாரிப்புகளையும் சந்தைப்படுத்த திறந்திருக்கிறது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

HIS Toyyiba Sdn Bhd என்பது சிலாங்கூரை ஹலால் தொழில் துறையில் உலகத் தரம் வாய்ந்த மாநிலமாக மாற்றுவதற்கு மாநில அரசின் முன் முயற்சியாகும் என்றார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.