SELANGOR

சிலாங்கூர் ஹாவோக் உணவுத் திருவிழா 2024இல் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள்

13 பிப்ரவரி 2024, 8:23 AM
சிலாங்கூர் ஹாவோக் உணவுத் திருவிழா 2024இல் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள்

ஷா ஆலம், பிப் 13: இன்று தொடங்கும் சிலாங்கூர் ஹேவோக் உணவுத் திருவிழா 2024 இல், மக்கள் பல்வேறு சுவாரஸ்யமான உணவுகளை நியாயமான விலையில் பெற வாய்ப்பு உள்ளது.

சிலாங்கூர் ஆசியா டீம் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் 2024 முன்னிட்டு இந்தத் திட்டம் மாநிலம் முழுவதிலுமிருந்து 160 உணவுத் தொழில் முனைவோரை ஒன்றிணைத்ததாக தொழில் முனைவோர் ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

"இந்த உணவுத் திருவிழா, தொழில்முனைவோர் பங்கேற்கவும், பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் நிகழ்வை உற்சாகப்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.

“இது பள்ளி விடுமுறையை முன்னிட்டு நடத்தப்படுகிறது. மேலும் குடும்பங்கள் இங்கு நேரத்தை செலவிடலாம்,” என்று நஜ்வான் ஹலிமி இன்று விழாவைத் தொடங்கி வைத்த பின்னர் கூறினார்.

இங்குள்ள செத்தியா ஆலம் கன்வென்ஷன் செண்டர் பார்க்கிங் இடத்தில் நடைபெறும் இந்த விழாவில் ஆறு நாட்களுக்குப் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என நஜ்வான் கூறினார்.

பார்வையாளர்கள் எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹாட் ஏர் பலூன்களில் சவாரி செய்ய வாய்ப்பு உள்ளது, இதன் விலை ஒரு நபருக்கு RM80 இல் தொடங்குகிறது மற்றும் வழங்கப்பட்ட குடும்ப பேக்கேஜ் மூலம் இதனை அனுபவிக்கலாம்.

"இன்று நாங்கள் RM10,000 மதிப்புள்ள 100 உணவு வவுச்சர்களை ஆரம்ப பார்வையாளர்களுக்கு வழங்குகிறோம். மேலும், வார இறுதி நாட்களில் அதிக பார்வையாளர்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.