SELANGOR

SFV உற்சாக ஓட்டப் பங்கேற்பாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன

13 பிப்ரவரி 2024, 6:34 AM
SFV உற்சாக ஓட்டப் பங்கேற்பாளர்களுக்கு அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன

ஷா ஆலம், பிப் 13: மார்ச் 2 ஆம் தேதி சிலாங்கூர் ஃப்ரூட்ஸ் வேலி (SFV) ஏற்பாடு செய்துள்ள ஏசான் SFV உற்சாக ஓட்டத்தில் பங்கேற்கும் பங்கேற்பாளர்களுக்குப் பல்வேறு அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகள் காத்திருக்கின்றன.

பெரியவர்களுக்கு RM40 மற்றும் குழந்தைகளுக்கு RM25 கட்டணத்துடன் இன்னும் 1,000 நுழைவுகள் திறந்திருப்பதாகச் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் துணை நிறுவனம் தெரிவித்துள்ளது.

"பங்கேற்பாளரருக்கு இலவசச் சோள சிப்ஸ், பருத்தி மிட்டாய் மற்றும் இளநீர் வழங்கப்படும். மேலும், அவர்கள் அதிர்ஷ்ட குலுக்கில் பங்குபெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

"மார்ச் 2 ஆம் தேதி காலை 7 மணிக்குப் பெஸ்தாரி ஜெயாவில் நடைபெறும் SFV உற்சாக ஓட்டத்திற்குக் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பங்கேற்போம்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு சட்டை, பதக்கம், பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பண்டான் இளநீர் வழங்கப்படும்.

பின்வரும் இணைப்பு https://www.mov3on.com/event-details.php?id=54 அல்லது http://onelink.to/7yt99 மூலம் பதிவு செய்யலாம்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.