SELANGOR

பராமரிப்பு இல்ல முதியவர்களுக்கு நன்கொடை  - எம்பிஎஸ்ஏ

7 பிப்ரவரி 2024, 7:04 AM
பராமரிப்பு இல்ல முதியவர்களுக்கு நன்கொடை  - எம்பிஎஸ்ஏ

ஷா ஆலம், பிப் 7: நேற்று செக்‌ஷன் U3 உள்ள ``Elderly Love Living Care Centre`` முதியோர்களின் பராமரிப்பு இல்லத்திற்கு ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) வருகை புரிந்தது.

அங்கு வசிக்கும் 25 சீன முதியவர்களின் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை உற்சாகப் படுத்துவதற்காக இந்த வருகை மேற்கொள்ளப்பட்டதாக அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் கூறினார்.

"பயணத்தின் நோக்கம் நலன்புரி இல்லத்தில் உள்ளவர்களின்  பெருநாள் கொண்டாங்களை குதுகலப்படுத்துவதும் பணம் மற்றும் ஹெம்பர் வடிவில் அன்பளிப்புகளை வழங்குவதாகும்" என்று முகமட் அசார் முகமட் ஷெரீப் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் எம் பிஎஸ்ஏ துணைச் செயலாளர் (மேலாண்மை) அஸ்மா முகமட் சின், எம்பிஎஸ்ஏ சமூக மேம்பாட்டு இயக்குநர் ஷஹ்ரின் அகமட் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வருகை நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) ஒரு பகுதியாகும் என அஸ்ஹரின் தெரிவித்தார்.

"எம்பிஎஸ்ஏவை அக்கறையுள்ள உள்ளாட்சி அமைப்பாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டில் ஏற்ப, தேவைப்படுபவர்களுக்கு உதவி அளிப்பதற்கான தனது முயற்சியை எம்பிஎஸ்ஏ தொடரும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.