SELANGOR

பந்திங் தொகுதியில் 400 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்- பாப்பாராய்டு வழங்கினார்

5 பிப்ரவரி 2024, 7:27 AM
பந்திங் தொகுதியில் 400 குடும்பங்களுக்கு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள்- பாப்பாராய்டு வழங்கினார்

பந்திங், பிப் 5 - விரைவில் கொண்டாடப்படவிருக்கும் சீனப்புத்தாண்டை முன்னிட்டு பந்திங் தொகுதியிலுள்ள 400 சீனக் குடும்பங்களுக்குப் பெருநாள் கால இலவச ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டுகள் வழங்கப்பட்டன.

பந்திங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் ஏற்பாட்டிலான இந்த பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் இங்குள்ள எக்கோன்சேவ் பேராங்காடியில் நேற்று நடைபெற்றது.

பெருநாளைக் கொண்டாடுவதில் வசதி குறைந்தவர்கள் எதிர்நோக்கும் நிதிச்சுமையை குறைக்கும் நோக்கில் தலா 200 வெள்ளி மதிப்பிலான இந்த பற்றுச் சீட்டுகள் தகுதி உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுவதாகப் பாப்பராய்டு கூறினார்.

சீனப்புத்தாண்டு மட்டுமின்றி நோன்புப் பெருநாள், தீபாவளி போன்ற முக்கியப் பெருநாட்களின் போதும் இத்தகைய இலவசப் பற்றுச் சீட்டுகளை வழங்கும் திட்டத்தை மாநில அரசு அமல்படுத்தி வருவதாக அவர் சொன்னார். இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் எக்கோன்சேவ் பேரங்காடியில் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொண்டனர்.

இத்தகை மக்கள் பரிவுத் திட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநில அரசுக்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வை தொகுதி சேவை மையப் பொறுப்பாளர்களும் தன்னார்வலர்களும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.