SELANGOR

கம்போங் கோஸ்கானில் பொங்கல் விழா- டாக்டர் சத்திய பிரகாஷ் சிறப்பு வருகை

5 பிப்ரவரி 2024, 2:54 AM
கம்போங் கோஸ்கானில் பொங்கல் விழா- டாக்டர் சத்திய பிரகாஷ் சிறப்பு வருகை

ரவாங், பிப் 5 - இங்குள்ள கம்போங் கோஸ்கான் கிராம குடியிருப்பாளர்

மேம்பாட்டு மன்றத்தின் (எம்.பி.கே.கே.) ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற

பொங்கல் விழாவில் உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியின்

ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் சிறப்பு பிரமுகராகக் கலந்து

கொண்டார்.

இந்நிகழ்வில் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் 16 குடும்பங்களைச்

சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவின் முத்தாய்ப்பு

அங்கமாகப் பொங்கலிடும் போட்டி, சிறார்களுக்கான வர்ணம் தீட்டும்

போட்டியும் நடத்தப்பட்டன.

இந்த பொங்கல் நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த

கம்போங் கோஸ்கான் கிராமத் தலைவர் குமார் ராவ் மற்றும் எம்.பி.கே.கே.

நிர்வாகத்தினருக்கு டாக்டர் சத்திய பிரகாஷ் நன்றியையும்

பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் உலு சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர்களான

ப.புவனேஸ்வரன், வி.முருகன், ஆர்.ராஜசேகர், எஸ்.ஸ்ரீகாந்த், ராஜேஸ்ராவ்,

ஹயாத்தி சாட், இந்திய சமூகத் தலைவர் குணாளன் உள்பட திரளானோர்

கலந்து கொண்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.