SELANGOR

இன்று கிள்ளான் மாநகராகப் பிரகடனம்- மீடியா சிலாங்கூரில் நேரடி ஒளிபரப்பு

5 பிப்ரவரி 2024, 2:43 AM
இன்று கிள்ளான் மாநகராகப் பிரகடனம்- மீடியா சிலாங்கூரில் நேரடி ஒளிபரப்பு

ஷா ஆலம், பிப் 5- கிள்ளானை மாநகராகப் பிரகனப்படுத்தும் நிகழ்வுக்கு

மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ்

தலைமை தாங்குகிறார்.

கிள்ளான், விண்ட்ஹாம் ஹோட்டலில் இன்று காலை நடைபெறும் இந்த

வரலாற்றுப்பூர்வ நிகழ்வு மீடியா சிலாங்கூரின் பேஸ்புக், டிவிட்டர், டிக்டாக்

மற்றும் யூடியூப் வாயிலாகவும் MYTV Mana-mana என்ற அலைவரிசையிலும்

காலை மணி 8.30 மணி முதல் நேரடியாக ஒளிரப்பப்படும்.

இந்த நிகழ்வில் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் இங்கா

கோர் மிங், மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் மாநில

அரசின் பிரமுகர்கள் கலந்து கொள்வர்.

கிள்ளான் மாநகராக தரம் உயர்த்தப்படும் தகவலை கூட்டரசு அரசாங்கம்

கடந்தாண்டு ஜூலை மாதம் அறிவித்தது. இந்த அறிவிப்பின் வழி நாட்டில்

மாநகர் அந்தஸ்து பெறும் 20 நகராகக் கிள்ளான் விளங்குகிறது.

இதனைத் தொடர்ந்து கிள்ளான் நகரில் பொது சந்தைகள் கழிப்பறைகள்,

பாதசாரிகளுக்கான நடைபாதைகளை தரம் உயர்த்துவதற்கு மத்திய அரசு 3

கோடியே 46 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்தது.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.