SELANGOR

போர்ட் கிள்ளான், உலு லங்காட் சாலைகளை சரி செய்யும் பணியை இன்ஃப்ராசெல் மேற்கொண்டுள்ளது

30 ஜனவரி 2024, 1:13 PM
போர்ட் கிள்ளான், உலு லங்காட் சாலைகளை சரி செய்யும் பணியை இன்ஃப்ராசெல் மேற்கொண்டுள்ளது

ஷா ஆலம், ஜன 30: போர்ட் கிள்ளான் மற்றும் உலு லங்காட் சாலை  மேற்பரப்புகளை சீரமைக்கும் பணியில் இன்ஃப்ராசெல் ஈடுபட்டுள்ளது.

போர்ட் கிள்ளான்  ஜாலான் தெலுக் கோங், பகுதியில் ஓரளவு பழுது பார்க்கும் பணிகள்  முடிந்து விட்டதாகவும்,  நாளை அதிகாலையில் முழுமையாக முடிவடையும் என்று  எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

போர்ட் கிள்ளான் மாநில சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிசாம் சமான் ஹுரியும்  பராமரிப்புப் பணிகளை காண வந்திருந்தார்.

நேற்று,  உலு லங்காட்   ஜாலான் புக்கிட் பெராஸ் என்ற இடத்தில் புனரமைப்பு முறைகளைப் பயன்படுத்தி சேதமடைந்த சாலைகளை சரி செய்யும் பணியையும் இன்ஃப்ராசெல் மேற்கொண்டது.

பராமரிப்பு வேலைகள் 25 சதவீதத்தை எட்டியுள்ளது.  அவை  இந்த பிப்ரவரியில்  நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் விளக்கினார்.

செய்து பொதுமக்கள்   தங்கள் பகுதியில்  உள்ள சாலைகள் பற்றி  தொடர்ந்து புகார் அளிக்கலாம். அதனை  #INFRASEL #NamaJalan #Daerah என்ற அடையாளத்துடன்  X  பதிவேற்றம்  செய்யலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.