SELANGOR

 41 இடங்களில் ஒன்பது குப்பைத் தொட்டிகளை வைக்க ஏற்பாடு - சபாக் பெர்ணம் நகராண்மை கழகம்

30 ஜனவரி 2024, 6:20 AM
 41 இடங்களில் ஒன்பது குப்பைத் தொட்டிகளை வைக்க ஏற்பாடு - சபாக் பெர்ணம் நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜன 30: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 41 இடங்களில் மொத்த ஒன்பது குப்பைத் தொட்டிகளை வைக்க சபாக் பெர்ணம் நகராண்மை கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

'ரோல் ஆன் ரோல் ஆஃப்' (ரோரோ) தொட்டிகளின் சேவை நேற்று தொடங்கி பிப்ரவரி 13 வரை வழங்கப்படும் என்று அதன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் அதிகாரி நோரைனி அகமட் தெரிவித்தார்.

"இந்த ரோரோ தொட்டிகள் அனைத்தும் திட்டமிடப்பட்ட தேதியின்படி சம்பந்தப்பட்ட அனைத்து பகுதிகளிலும் வைக்கப்படும்.

"இதில் தளவாடப் பொருட்கள், கிளைகள் அல்லது இலைகள் போன்ற தோட்டக் கழிவுகளை வீசலாம். அதே நேரத்தில் சமையலறை கழிவுகள் அல்லது உணவு போன்ற வீட்டு கழிவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

ரோரோ தொட்டிகள் வைக்கும் இடங்களின் முழுப் பட்டியலையும் எம்டிஎஸ்பி முகநூல் மூலம் சரி பார்க்கலாம் அல்லது எம்டிஎஸ்பி புகார் தளத்தை 012-800 8725 என்ற எண்ணில் அழைக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.