SELANGOR

சாலைக்குப் பெயர் சூட்டும் போட்டியில் பங்கேற்க அழைப்பு - எம்பி கே ஜே

29 ஜனவரி 2024, 6:07 AM
சாலைக்குப் பெயர் சூட்டும் போட்டியில் பங்கேற்க அழைப்பு - எம்பி கே ஜே

ஷா ஆலம், ஜன 29: உள்ளூர் அதிகார சபையின் (பிபிடி) ஜாலான் சுலைமான் பாதைக்குப் பெயர் சூட்டும் போட்டியில் பங்கேற்க ஆர்வம் உள்ள நபர்களைக் காஜாங் நகராண்மை கழகம் அழைக்கிறது.

இப்போட்டி ஜனவரி 24 முதல் பிப்ரவரி 6 வரை திறந்திருக்கும். வெற்றியாளர்கள் RM1,500 ரொக்கத்தையும் பாராட்டுச் சான்றிதழும் வெல்லும் வாய்ப்பு உள்ளது என எம்பிகேஜே தெரிவித்தது.

"பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பம் இலவசம் ஆகும்.

"மலாய் மொழியை மட்டுமே பயன்படுத்துவது அவசியம் மற்றும் உருவாக்கப்பட்ட பெயர் காஜாங் நகரத்தின் வரலாற்றை சார்ந்திருக்க வேண்டும். சுவரோவியங்களின் காட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் சுவரொட்டியில் உள்ள QR குறியீடு மூலம் கூடுதல் தகவல்களையும் நுழைவுப் படிவத்தையும் பெறலாம், பின்னர் torujangmpkj@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.