SELANGOR

டமான்சாரா டாமாயில் தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா - அமைச்சர் கோபிந்த் சிறப்பு வருகை

22 ஜனவரி 2024, 2:26 AM
டமான்சாரா டாமாயில் தைப்பொங்கல் தமிழர் திருநாள் விழா - அமைச்சர் கோபிந்த் சிறப்பு வருகை

டமான்சாரா, ஜன 22- தைப்பொங்கல் தமிழர் திருநாளை  முன்னிட்டு டமான்சாரா டாமாய் இந்தியர் சமூக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினரும் டிஜிட்டல்  அமைச்சருமான கோபிந்த் சிங் டியோ சிறப்பு வருகை புரிந்து விழாவை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.

தைப் பொங்கலை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்த நிகழ்வில் மலாய் பெண்கள் உட்பட 30 மகளிர்  ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.

கோலாட்டம், சிலம்பாட்டம் , மயிலாட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் இதில்  இடம் பெற்றன.

டமான்சாரா டாமாய் இந்தியர் சமூக சங்கத்தின் தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மித்ராவிடம் இருந்து நிதியை பெற்று  இந்தியர்கள் வியாபாரம் செய்யும் வகையில் ஏழு கடைகள் இந்த பொங்கல் விழாவில் அமைக்கப்பட்டதை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பாராட்டினார்.

டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்று ரமேஷ் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.