SELANGOR

ஜாலான் தெலுக் கோங் சாலையின் ஒரு பகுதியை சரி செய்யும் பணி 17 சதவீதத்தை எட்டியுள்ளது

17 ஜனவரி 2024, 8:57 AM
ஜாலான் தெலுக் கோங் சாலையின் ஒரு பகுதியை சரி செய்யும் பணி 17 சதவீதத்தை எட்டியுள்ளது

ஷா ஆலம், ஜன 17: ஜாலான் தெலுக் கோங், போர்ட் கிள்ளான் சாலையின் ஒரு பகுதியை சரி செய்யும் பணியை இன்ஃப்ராசெல் மேற்கொண்டு வருகிறது.

பழுதுபார்ப்புப் பணி ஜனவரி 15 வரை 17 சதவீதத்தை எட்டியுள்ளது என கும்புலான் செமெஸ்தா தெரிவித்தது.

திங்கள் கிழமை நிலவரப்படி பழுதுபார்ப்புப் பணி 17 சதவீதத்தை எட்டியுள்ளது" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஜனவரி 11ஆம் தேதி, ஜாலான் லாடாங் பிலேம்போர்ன் ஜெராம், கோலா சிலாங்கூர் பகுதியில் சாலை மேற்பரப்பை மேம்படுத்துவதற்கான பணிகளை இன்ஃப்ராசெல் தீவிரமாக மேற்கொண்டது.

மேலும், ஜனவரி 9 அன்று ஜாலான் புக்கிட் பெடோங், பெஸ்தாரி ஜெயாவில் சாலை பழுதுபார்க்கும் பணியையும் இன்ஃப்ராசெல் மேற்கொண்டது.

கூடுதலாக, மாநில சாலை பராமரிப்பு நிறுவனம் சமீபத்தில் சிலாங்கூர் SUK விளையாட்டு வளாகத்தில் உள்ள சிலாங்கூர் கால்பந்து கிளப் (சிலாங்கூர் எஃப்சி) பயிற்சி மையத்தில் சாலையை வெற்றிகரமாக மேம்படுத்தியது.

சாலையில் சேதம் ஏற்பட்டால் #INFRASEL #NamaJalan #Daerah என்ற அடையாளத்துடன் X பக்கத்தில் செய்தியை பதிவேற்றம் செய்து பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளிக்கலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.