SELANGOR

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தக் குப்பை சேகரிக்கும் சேவை - எம்பிஎஸ்ஜே

17 ஜனவரி 2024, 6:31 AM
சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தக் குப்பை சேகரிக்கும் சேவை - எம்பிஎஸ்ஜே

ஷா ஆலம், ஜன 17: சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்தக் குப்பை சேகரிக்கும் சேவையை சுபாங் ஜெயா மாநகராட்சி வழங்குகிறது.

சீனப் புத்தாண்டைக் கொண்டாடுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது மற்றும் இச்சேவை தரை வீடுகளுக்கு மட்டுமே உட்பட்டது என எம்பிஎஸ்ஜே முகநூல் மூலம் தெரிவித்தது.

"விண்ணப்பங்கள் ஜனவரி 22 முதல் 31 வரை திறந்திருக்கும். மேலும் KDEB Waste Management (KDEBWM) 03-8081 4437 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது 011-3558 4437 என்ற வாட்ஸ்அப் பயன்பாட்டின் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்" என்று தெரிவிக்கப்பட்டது.

ஜனவரி 29 முதல் அடுத்த பிப்ரவரி 9 வரை 13 நாட்களுக்கு KDEBWM மூலம் சேகரிப்பு மேற்கொள்ளப்படும்.

அதில் மெத்தைகள் மற்றும் பழைய தளவாடப் பொருட்கள், மின்சாதனங்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கும். ஆனால், வீடு புதுப்பிப்பு கட்டிட கழிவுகள் மற்றும் வீட்டு தினசரி கழிவுகள் ஆகியவை சேகரிப்படாது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.