SELANGOR

மின்சாரம் மற்றும் நீர் சேமிப்பு போட்டிக்கு எம்பிஜே RM18,000 வரை ரொக்கப் பரிசு

17 ஜனவரி 2024, 2:35 AM
மின்சாரம் மற்றும் நீர் சேமிப்பு போட்டிக்கு எம்பிஜே RM18,000 வரை ரொக்கப் பரிசு

ஷா ஆலம், ஜன 17: ஜனவரி முதல் பிப்ரவரி 29 வரை எம்பிஜே மின்சாரம் மற்றும் நீர் சேமிப்பு போட்டியில் RM18,000 வரை ரொக்கப் பரிசுகளை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் வழங்குகிறது.

எம்பிஜேவின் குறைவான கார்பன் நகரம் 2024 பிரச்சாரத்தை முன்னிட்டு இந்த போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்றம் (பிபிடி) தெரிவித்துள்ளது. எம்பிஜே நிர்வாகப் பகுதியில் வசிப்பவர்கள் இப்போட்டியில் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள்.

"கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நீர் மற்றும் மின்சார பயன்பாடு தரவுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.

"பங்கேற்பு இலவசம் ஆகும். வெற்றியாளர் இந்த ஜூன் மாதம் அறிவிக்கப்படுவர்," என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

ஆர்வமுள்ளவர்கள் https://forms.gle/AU5stwYnkaNPxEv49 என்ற இணைப்பில் முழுமையான தகவலை நிரப்பலாம் அல்லது போஸ்டரில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

மேலும் தகவலுக்குப் பொதுமக்கள் எம்பிஜே நகர திட்டமிடல் துறையை 03-4285 7008 அல்லது 0122632369 என்ற எண்ணின் மூலம் ஷபிக்கைத் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.