SELANGOR

`கடனை திரும்ப செலுத்தும் பிரச்சார' அதிர்ஷ்டக் குலுக்கில் 100 தொழில் முனைவோர் வெற்றி பெற்றனர் - ஹிஜ்ரா

11 ஜனவரி 2024, 8:34 AM
`கடனை திரும்ப செலுத்தும் பிரச்சார' அதிர்ஷ்டக் குலுக்கில் 100 தொழில் முனைவோர் வெற்றி பெற்றனர் - ஹிஜ்ரா

ஷா ஆலம், ஜன 11: யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) ஏற்பாடு செய்த ``Bayar balik dan menang`` பிரச்சாரம் 2023 இன் அதிர்ஷ்டக் குலுக்கில் மொத்தம் 100 தொழில் முனைவோர் வெற்றி பெற்றனர்.

ஜனவரி 1 முதல் டிசம்பர் 18 வரை ஏற்பாடு செய்யப்பட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற 703 தொழில் முனைவோரில் வெற்றியாளர்களும் அடங்குவர் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ மரியா ஹம்சா கூறினார்.

"இந்தப் பிரச்சாரம், தொழில்முனைவோரின் தீவிரத்தன்மை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் காட்டப்படும் ஒழுக்கத்திற்காக அவர்களைப் பாராட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், “இந்தத் திட்டத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் வாரந்தோறும் கடனைத் திருப்பிச் செலுத்துபவர்கள் ஆவர்``.

முன்னதாக, பிரச்சாரத்தின் முக்கிய பரிசுக்கான அதிர்ஷ்டக் குலுக்கையை அவர் இங்குள்ள சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (Sidec) அலுவலகத்தில் நிறைவு செய்தார்.

குலுக்கல் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. அதாவது RM30,000 மற்றும் அதற்கும் குறைவான நிதிக்கான பிரிவு 1 மற்றும் RM31,000 முதல் RM100,000 வரையிலான நிதிக்கான பிரிவு 2 ஆகும்.

பரிசுகளில் விடுமுறை டிக்கெட்டுகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் முக்கிய பரிசான ஐந்து கிராம் தங்கம் மற்றும் 50 இன்ச் ஸ்மார்ட் தொலைக்காட்சி அடங்கும். அவற்றின் மொத்த மதிப்பு RM20,000 ஆகும்.

அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களை ஹிஜ்ரா சிலாங்கூர் பிரதிநிதி விரைவில் பரிசு பெறுவதற்காகத் தொடர்புகொள்வார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.