SELANGOR

மேரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் வசதி குறைந்தவர்களுக்கு உதவ  பட்டியல்  எடுப்பதில்  தீவிரமாக உள்ளார்

10 ஜனவரி 2024, 10:24 AM
மேரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் வசதி குறைந்தவர்களுக்கு உதவ  பட்டியல்  எடுப்பதில்  தீவிரமாக உள்ளார்

ஷா ஆலம், ஜன. 10:  மேரு சட்டமன்ற உறுப்பினர் தொகுதியில் வசதி குறைந்தவர்களுக்கு உதவ, தன் தொகுதியில் உள்ள வசதி குறைந்தவர்கள் பற்றிய தகவல்களைத் தீவிரமாக சேகரித்து வருகிறார். சரியான தரப்புக்கு  மாநில அரசின்  உதவிகள் வழங்க இது அவசியமாகிறது.

நன்கொடைகளை வழங்குவதோடு அவர்களுக்கு மாநில உதவியை பெறுவதற்கான தகுதி (சிலாங்கூர் ஜகாத் வாரியம் (LZS) மற்றும் சமூக நலத் துறையிடம் (JKM) உள்ளதா என்பதைத் தனது தரப்பு சரிபார்ப்பதாக மரியம் அப்துல் ரஷீட் கூறினார்.

"நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வாரத்தில் குறைந்தது ஐந்து குடும்பங்களை சந்திப்போம். நாங்கள் பண உதவி, ரஹ்மா உணவு கூடைகள் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற பிற தேவைகளை வழங்குகிறோம்.

"அதற்குப் பிறகு, அவர்கள் மாநில உதவி, ``LZS`` அல்லது ``JKM`` பெற தகுதியுடையவர்களா என்பதை நாங்கள் சரி பார்ப்போம். தகுதி இருந்தால், அவர்கள் பதிவு பெற  நாங்கள் உதவுவோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

உதவி தேவைப்படும் குடும்பங்கள் இருந்தால், சமூக சேவை மையத்திற்கு தகவல் தெரிவிக்க மேரு தொகுதி குடியிருப்பாளர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

"கஷ்டத்தில் உள்ளவர்களின், நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது உதவி தேவைப்படுபவர்கள் பற்றிய தகவல்களை உடனடியாகச் சேவை மையத்திற்குத் தெரிவிக்கவும். அவர்களின் சுமையைக் குறைக்க முயற்சிப்போம்," என்று மரியம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.