SELANGOR

திறந்த வெளியில் குப்பைகளை எரித்த இருவருக்குக் குற்றப்பதிவு- அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நடவடிக்கை

29 டிசம்பர் 2023, 7:33 AM
திறந்த வெளியில் குப்பைகளை எரித்த இருவருக்குக் குற்றப்பதிவு- அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் நடவடிக்கை

ஷா ஆலம், டிச 29 - திறந்த வெளி தீயிடல் நடவடிக்கைகளுக்கு எதிராக

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் மேற்கொண்ட நடவடிக்கையில் இரு

குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன.

அம்பாங் ஜெ நகராண்மைக் கழக அமலாக்கத் துறையுடன் இணைந்து

சுற்றுச்சூழல் துறை நேற்றிரவு ரவு 7.00 மணியளவில் தாமான் சஹாயா

மற்றும் அம்பாங் சம்போரானில் இந்த சோதனை நடவடிக்கையை

மேற்கொண்டது.

அந்நடவடிக்கையின் போது பொது இடங்களில் குப்பைகளை எரித்துக்

கொண்டிருந்த இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று

நகராண்மைக் கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த திறந்தவெளி தீயிடல் நடவடிக்கைகளுக்கு எதிரான இந்த

நடவடிக்கை 2007ஆம் ஆண்டு குப்பை சேகரிப்பு, அகற்றல் மற்றும் அழிப்பு

துணைச் சட்டத்தின் 16வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாக அது

தெரிவித்தது.

குப்பைகள் மற்றும் பயன்படுத்தப்படாத பொருள்களைப் பொது இடங்களில்

எரிப்பதை இந்த சட்ட விதி தடை செய்கிறது. பொது இடங்களில்

குப்பைகளை எரிப்பது குற்றம் என்பதால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை

ஏற்படுத்தும் இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளும்படி

நகராண்மைக் கழகம் பொது மக்களைக் கேட்டுக் கொண்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.