ECONOMY

இந்தியர்களுக்கு   கோரிக்கை - வாக்களிக்க முந்துங்கள்

12 ஆகஸ்ட் 2023, 7:06 AM
இந்தியர்களுக்கு   கோரிக்கை - வாக்களிக்க முந்துங்கள்

கோ.சிலாங்கூர்.ஆகஸ்ட்.12- பிற்பகல் 1.00 வரையில் கோல சிலாங்கூரில் உள்ள ஈஜோக், புக்கிட் மெலவாத்தி மற்றும் ஜெரம் சட்ட மன்ற தேர்தல் மையங்களில் இந்தியர்கள் வாக்களிப்பு சூடு பிடிக்க வில்லை. காலையில் வேலைக்கு சென்று திரும்பி இந்தியர்கள் மதிய வாக்கில் வாக்களிக்க வருவார்கள் என்று எதிர் பார்க்கப் படுகிறது.

காலை முதல் நண்பகல் வரையில் வாக்களிப்பு சற்று மந்தகாக காணப் பட்டது. இன்று வாக்களிப்பு நாள். இன்றைக்கு மாநில அளவில் விடுமுறை கொடுத்திருந்தால் இந்தியர்கள் காலையிலேயே வாக்களிக்க வந்திருப்பார்கள். வேலை முடித்து வீடு திரும்பி இந்தியர் வாக்களிக்க மதியம் வந்து சேர்வார்கள் என்று எதிர் பார்க்கிறோம் என்று ஈஜோக் சட்ட மன்றத்தின் இந்திய சமுதாயத் தலைவரான மணிவண்ணன் தெரிவித்தார்.

பல வாக்களிப்பு மையங்கள் காலையில் மந்தமாக காணப் பட்டது. ஆனால் பிற்பகல் 2.00 மணி முதல் வாக்களிப்பு சற்று சூடு பிடிக்க தொடங்கியுள்ளன.

இந்தியர்கள் மாலையில் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.