ஷா ஆலம், ஜன 1- நிலைத்தன்மை மற்றும் மக்களின் நலன் கருதி இவ்வாண்டுநடைபெறும் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள்
தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்று மந்திரி புசார் நம்பிக்கை கொண்டுள்ளார்.
கடந்தக 2018 ஆம் ஆண்டு முதல் கூட்டணியின் சிறப்பான அடைவு நிலைகளை
விவரித்த டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, உண்மைகள் மற்றும் அறிவியலின்
அடிப்படையில் நாட்டில் கோவிட்-19 தொற்றுநோயை நிர்வகிப்பதில் சிலாங்கூர் சிறந்த
எடுத்துக் காட்டாக விளங்குகிறது என்றார்.
மக்களுக்குப் பயனளிக்கும் 48 நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாநில அரசு 'சிலாங்கூர் கேரிங்' எனும் பரிவுத் திட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார்.
2023 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சிலாங்கூர் மாநிலத் தேர்தல் தவிர்க்க முடியாத விவாதப் பொருளாக இருக்கும். ஹராப்பானின் தூணாக விளங்கும் டாருள் ஏசான் மாநிலத்தின் சிறப்பான மற்றும் வெற்றிகரமான நிர்வாகத்தைத் தொடர மக்கள்
ஹராப்பான் கூட்டணிக்கு மகத்தான ஆதரவை வழங்குவார்கள் என நம்புகிறோம் என
அவர் குறிப்பிட்டார.
தேசத்தின் தூணாகவும் அடித்தளமாகவும் சிலாங்கூரை நிலைநிறுத்துவதில் 2008 முதல் ஹராப்பானின் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் இன்று தனது புத்தாண்டு 2023 செய்தியில் கூறினார் .
வளமான, நட்புறவான மற்றும் செழிப்பான அரசை உருவாக்குவதிலும் நிலைத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டுடன் சிலாங்கூரை ஆள்வதிலும் தனக்குள்ள திறனை ஹராப்பான் நிரூபித்ததாகவும் அமிருடின் கூறினார்.
இதற்கிடையில், மாநில மக்களின் நல்லிணக்கத்தை பாதிக்கக்கூடிய எந்தவொரு தீவிரவாதம் மற்றும் வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளை சிலாங்கூர் அரசு கடுமையாக
எதிர்க்கிறது என்றும் அவர் சொன்னார்.
ECONOMY
நிலைத்தன்மை, மக்கள் நலனை தொடர்ந்து காக்க ஹராப்பானுக்கு ஆதரவு வழங்குவீர்- அமிருடின் வேண்டுகோள்
1 ஜனவரி 2023, 5:19 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



