ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து sicc மற்றும்  மிட்லெண்ட்ஸ் பள்ளி வாரியம்  நடத்திய  மாணவர் திறன் மேம்பாடு வகுப்பு

29 டிசம்பர் 2022, 5:02 PM
சிலாங்கூர் மாநில அரசுடன் இணைந்து sicc மற்றும்  மிட்லெண்ட்ஸ் பள்ளி வாரியம்  நடத்திய  மாணவர் திறன் மேம்பாடு வகுப்பு

ஷா ஆலாம் 29 டிச;- இங்குள்ள மிட்லெண்ட்ஸ் தங்கும் விடுதியில்  SPM இந்திய மாணவர்களுக்கு  2 நாள்  திறன்  மேம்பாடு வகுப்பை  சிலாங்கூர் மாநில அரசு  எஸ்.ஐ.சி.சி எனப்படும் சிலாங்கூர் இந்தியர்  ஆலோசக மன்றம் மிட்லெண்ட்ஸ் பள்ளி வாரியம் மற்றும் சில அரசு சாரா இயக்கங்கள் இணைந்து நடத்தியது.

இதில் முன்னால் கிள்ளான் நாடாளுமன்ற  உறுப்பினர் திரு. சார்ல்ஸ் சந்தியாகோ, கிள்ளான் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ், மிட்லெண்ட்ஸ் பள்ளியின் வாரிய உறுப்பினர்கள்  முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள் மற்றும் திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த திறன் மேம்பாடுப்  பட்டறையில்  கிள்ளான் பெட்டாலிங் மாவட்டங்களைச் சார்ந்த 70 மாணவர்கள் கலந்துக் பயன் பெற்றனர். மிட்லெட்ண்ஸ் தங்கும் விடுதியை  கல்விக்கு பயன்படுத்தும்  முதல் தொகுப்பு  மாணவர்களாக  அவர்கள் இருந்தனர் என்பது மகிழ்ச்சியான விவகாரம்.

இதில்  தொண்டு அடிப்படையில் பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர்கள்  சேவையைப் பாராட்டி மாநில மந்திரி புசார் அவர்களுக்கு  நற்சான்றிதழ்களை எடுத்து  வழங்கி நிறை உரையாற்றிய நிகழ்வை  நிறைவு செய்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.