SELANGOR

பள்ளி விடுமுறையைத்  தங்கள் குழந்தைகளுடன் கொண்டாடப் புத்தக கண்காட்சி  சிறந்த  வாய்ப்பாகும்

10 டிசம்பர் 2022, 7:52 AM
பள்ளி விடுமுறையைத்  தங்கள் குழந்தைகளுடன் கொண்டாடப் புத்தக கண்காட்சி  சிறந்த  வாய்ப்பாகும்

ஷா ஆலம், டிச 10: ஷா ஆலம் மாநகர மன்ற மாநாட்டு மையத்தில் (எம்பிஎஸ்ஏ) நடைபெறும் சிலாங்கூர் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி (எஸ்ஐபிஎஃப்) 2022-யைப் பார்வையிடப் பொதுமக்கள், குறிப்பாகப் பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள். இந்நிகழ்வு முடிவடைய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளன.

இன்று பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், 50,000 வருகையாளர்களை இந்நிகழ்ச்சி ஈர்க்கும்   என சிலாங்கூர் பொது நூலகக் கூட்டுத்தாபனத்தின் (பிபிஏஎஸ்) இயக்குநர்,  எதிர்பார்க்கிறார்.

பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகளில் கலந்து கொள்வதன் மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடலாம் என்று டத்தின் படுகா மஸ்துரா முஹமட் கூறினார்.

"தரமான புத்தகங்களை இங்கு வாங்குவதற்கு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வருவார்கள் என்று நம்புகிறோம். இது மறைமுகமாக குழந்தைகளிடம் படிக்கும் மனப்பான்மையையும் ஆர்வத்தையும் வளர்க்கும்.

கடைசி இரண்டு நாட்கள் பார்வையாளர்களுக்குச் சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் ஏலங்களை வழங்குகிறார்கள். இந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடையும் இந்நிகழ்வில் கடந்த ஆண்டு வருகையை விட 200,000க்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று மஸ்துரா நம்பிக்கை தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.