SELANGOR

சிலாங்கூர் புத்தக விழா- ஐந்து நாட்களில் 150,000 பேர் வருகை

6 டிசம்பர் 2022, 4:25 AM
சிலாங்கூர் புத்தக விழா- ஐந்து நாட்களில் 150,000 பேர் வருகை

ஷா ஆலம், டிச 6- சிலாங்கூர் அனைத்துலக புத்தக விழா இம்மாதம் முதல் தேதி தொடங்கி இங்குள்ள ஷா ஆலம் மாநகர் மன்ற மாநாட்டு மையத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வு முதல் ஐந்து நாட்களில் 150,000 வருகையாளர்களை ஈர்த்து சாதனை புரிந்துள்ளது.

இந்த புத்தக விழா 11 நாட்களுக்கு நடத்தப்படும் என்று சிலாங்கூர் பொது நூலகக் கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.

இந்த புத்தக விழாவுக்கு கடந்த சனிக்கிழமை மிக அதிகமாக 30,000 பேர் வருகை புரிந்தனர். இவ்விழாவில் இடம் பெற்றுள்ள காட்சிக் கூடங்கள் எண்ணிக்கையும் 295 லிருந்து 303 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.

இந்த புத்தக விழா பொதுமக்களின் கவனத்தை மேலும் ஈர்ப்பதற்கு ஏதுவாக மாநில அரசாங்கத் தலைவர்களும் இவ்விழாவுக்கு வருகை புரிய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த புத்தக விழாவை சிலாங்கூர் மாநில அரசு சிலாங்கூர் பொது நூலகக் கழகத்துடன் இணைந்து கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது.

டிசம்பர் முதல்  தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக விழாவுக்கு 300,000 பேர் வரை வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.