ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரின் இரு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

28 நவம்பர் 2022, 4:07 AM
சிலாங்கூரின் இரு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தை எட்டியது

ஷா ஆலம், நவ 28- சிலாங்கூரில் நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி இரு ஆறுகளில் நீர் மட்டம் அபாயக் கட்டத்தில் உள்ள வேளையில் மேலும் ஒரு ஆறு எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது.

செமினி ஆற்றின் பெக்கான் பாங்கி லாமா பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் வழக்கமான 13.70 மீட்டரைத் தாண்டி 16.91 மீட்டராக உயர்ந்துள்ளதாக  சிலாங்கூர் அரசின் வெள்ளத் தகவல் அகப்பக்கம் கூறியது.

லங்காட் ஆற்றின் ஜெண்டேராம் ஹிலிர் பகுதியில் நீர் மட்டம் 11.08 மீட்டராக உயர்வு கண்டிருந்த து. இப்பகுதியில் வழக்கமாக நீரின் அளவு 7.40 மீட்டராக இருக்கும்.

சபாக் பெர்ணம் மாவட்டத்தின் பெர்ணம் ஆற்றின் ரிம்பா கேடிஆர் பகுதியில் வழக்கமான ஒரு மீட்டர் அளவைத் தாண்டி 2.22 மீட்டராக அதிகரித்துள்ளது.

இது தவிர, சுங்கை காண்டீஸ், சுங்கை பெர்ணம், சுங்கை லங்காட் ஆகிய ஆறுகளில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவைத் தொட்டுள்ளன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.