ECONOMY

பள்ளி உபகரண உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பண்டார் உத்தாமா உறுப்பினர் வேண்டுகோள்

23 நவம்பர் 2022, 4:08 AM
பள்ளி உபகரண உதவித் திட்டத்திற்கு விண்ணப்பிக்க பண்டார் உத்தாமா உறுப்பினர் வேண்டுகோள்

ஷா ஆலம், நவ 23- மீண்டும் பள்ளிக்குத் செல்வோம் திட்டத்தின் கீழ் 100 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவதற்கு வரும் நவம்பர் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்யும்படி பண்டார் உத்தாமா சட்டன்றத் தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சிலாங்கூரை வசிப்பிடமாக கொண்ட மற்றும் மாதம் 4,000 வெள்ளிக்கும் குறைவாக வருமானம் பெறும் குடும்பங்கள் இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று தொகுதி உறுப்பினர் ஜமாலிய ஜமாலுடின் கூறினார்.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வோர் பண்டார் உத்தாமா தொகுதி வாக்காளர்களாகவும் இதர அமைப்புகளிடமிருந்து பள்ளி உதவியைப் பெறாதவர்களாகவும் இருத்தல் அவசியம் என்று அவர் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவருக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படும். தகுதி உள்ள குடும்பங்களை பண்டார் உத்தாமா தொகுதி  பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்வர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த உதவித் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கான மனுபாரங்களை https://tiny.ccBUSsekolah2023  எனும் அகப்பக்கம் வாயிலாக பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட பாரங்களை elhanis.pkbu@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியில் பண்டார் உத்தாமா தொகுதி சேவை மையத்திற்கு அனுப்ப வேண்டும்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.