ECONOMY

நீங்கள் இருக்கும் வரை நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் - அமிருடின் ஷாரி  நம்பிக்கை

12 நவம்பர் 2022, 5:55 PM
நீங்கள் இருக்கும் வரை நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் - அமிருடின் ஷாரி  நம்பிக்கை

கோம்பாக், நவம்பர்.12- கோம்பாக் தொகுதி  வாழும்   இந்திய மக்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை ஒரு போதும் நான் வீண்ணடிக்க மாட்டேன் என்று கோம்பாக் தொகுதியின்  பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்  டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று பத்து கேவ்ஸ் மணி கோர்னர் உணவகத்தில் இந்திய  மக்களை சந்தித்த போது கூறினார்.

இந்த வேளையில் கோம்பாக் தொகுதியில் இருக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் நான் நிறைய செய்ய ஆசைப் படுகிறேன். உங்களை நம்பித்தான் நான் மீண்டும் களம் இறங்குகிறேன், நீங்கள் இருக்கும் வரை நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கோம்பாக் பக்காத்தான் ஹராப்பான் கோட்டை என்பதால் இம்முறையும் பக்காத்தான் ஹராப்பான் அமோக வெற்றி பெறும் என்று  தெரிவித்தார்.

கோம்பாக் தொகுதி இந்தியர்கள் ஆதரவு எனக்கு பெரும் உற்சாகம் தருகிறது. மேலும் சீனர்கள் மலாய்க்காரர்கள் மத்தியில் பக்காத்தானுக்கு ஆதரவாக அலை வீசுகிறது என்று அவர் சொன்னார்.

செய்திகள் ஆர்.பார்த்திபன்

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.