ECONOMY

சொந்த செலவில் தெலுக் வட்டாரத்தில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை அறை அமைத்த ஆதரவாளர்.

8 நவம்பர் 2022, 9:42 AM
சொந்த செலவில் தெலுக் வட்டாரத்தில் நம்பிக்கை கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை அறை அமைத்த ஆதரவாளர்.

தெலுக்.நவ.8- கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் வேலைகள் அனல் பறக்க தொடங்கி விட்டது. சிஜாங்காங் சட்டமன்றம் பாஸ் கட்சியின் கோட்டை. அந்த கோட்டையை தகர்த்தெரிந்து நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளர் மணிவண்ணனின் வெற்றியை உறுதி செய்ய தெலுக் பங்லிமா காராங்கில் தேர்தல் நடவடிக்கை அறை திறந்திருப்பதாக தர்மராஜ் தெரிவித்தார்.

கடந்த 3 தவணையாக பாஸ் கட்சி சிஜாங்காங் சட்டமன்றத்தை தற்காத்து வருகிறது. இம்முறை கோல லங்காட் நாடாளுமன்றத்தை கைப்பற்ற களத்தில் இறங்கி விட்டது. அதை முறியடிக்க இவ்வட்டாரத்தில் தேர்தல் நடவடிக்கை அறை அவசியம். ஆகவே தான் தெலுக் வட்டாரத்தில் இந்த தேர்தல் நடவடிக்கை அறை அமைத்தாக தர்மராஜ் கூறினார்.

செய்தி சுப்பையா சுப்ரமணியம்

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.