கோல சிலாங்கூர்.நவ.5- நமது வெற்றியை உறுதி செய்ய, தேர்தல் இயந்திரம் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைக்க வேண்டும் என்ற உற்சாக உரையுடன் 500க்கும் மேற்பட்ட நம்பிக்கை கூட்டணியின் ஆதரவாளர்கள் புடை சூழ அணி வகுத்து வந்தார் டாக்டர் சூல்கிப்ளி.
தமது வேட்பாளர் மனுவை இன்று காலை 9.15 மணி அளவில் சமர்ப்பித்தார்.
கோல சிலாங்கூர் பி.கே.ஆர் கட்சியின் தொகுதி தலைவர் திபன் சுப்ரமணியம், ஜ.செ.க.வின் கோல சிலாங்கூர் பிரதிநிதி லிம்முன் சிறப்பாக கலந்துக் கொண்டனர்.
[caption id="attachment_474200" align="alignleft" width="500"]
Calon Pakatan Harapan (HARAPAN) Datuk Seri Dr Dzulkefly Ahmad bersama penyokongnya ketika hadir ke pusat penamaan calon di Stadium Tertutup Kuala Selangor pada 5 November 2022. Foto AHMAD ZAKKI JILAN/SELANGORKINI[/caption]
நம்பிக்கை கூட்டணியின் ஆதரவாளர்கள் மிகவும் உற்சாகத்துடன் அணி வகுப்பில் கலந்து கொண்டு கித்தா பொலே, லாவான் தெதாப் லாவான் என்ற சுலோகங்களை முழங்கி வந்தனர்.
வேட்பாளர் மனு தாக்கல் செய்யும் மண்டபத்துக்கு நுழையும் தறுவாயில் 30 பேர் தான் முடியும் என்று ரேலா அதிகாரிகள் தடுத்து நிறுத்தினார். ஆனால் தேசிய முன்னணி ஆதரவாளர்களுக்கு இந்த தடை விதிக்காமல் அனைவரையும் அனுமதித்திருப்பதைக் கண்டு ஆத்திரம் அடைந்த நம்பிக்கை கூட்டணியின் ஆதரவாளர்கள் இரும்பு கதவை ( கேட்டை ) திறந்து அனைவரும் உள்ளே புகுந்தனர்.
வேட்பு மனு தாக்கல் 9.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற்றது. இத்தருணத்தில் வெளியே காத்திருந்த நம்பிக்கை கூட்டணியின் ஆதரவாளர்கள் பெஜுவாங் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவாளர்களை துரோகிகள் என்று கூச்சலிட்டனர்.
பெஜுவாங் ஆதரவாளர்கள் 50 க்கும் குறைவானவர்களே.ஆகையால் அவர்கள் அமைதியுடன் இருந்தனர். இதே போல் ஏறக்குறைய 100 பேர் கொண்ட பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவாளர்களும் உற்சாகம் இன்றி அமைதியாக இருந்தனர்.
இருப்பினும் தேசிய முன்னணி சார்பில் ஏறக்குறைய 700 முதல் 800 பேர் இருப்பர். இவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளவில்லை.
கோலசிலாங்கூர் தொகுதி வேட்புமனு தாக்கல் நிகழ்வு அமைதியாக நடைபெற்று முடிந்தது.
காலை 11.15 மணிக்கு தேர்தல் அதிகாரி வேட்பு மனு தகவலை அறிவித்தார். பின்னர் வேட்பாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டனர்.
வேட்பாளர் மையத்தை விட்டு மிகவும் அமைதியாக முதலில் பெஜுவாங் வேட்பாளரும் ஆதரவாளர்களும் வெளியேறினர். தொடர்ந்து பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளரும் ஆதரவாளர்களும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து தேசிய முன்னணி வேட்பாளரும் ஆதரவாளர்களும் வெளியேறினர்.
இறுதியாக, நம்பிக்கை கூட்டணியின் வேட்பாளரும் ஆதரவாளர்களும் காலை 11.30 மணிக்கு கோல சிலாங்கூரில் உள்ள உள் அரங்கம் விளையாட்டு வளாகத்தில் இருந்து வெளியேறினர்.
மொத்தத்தில் இன்று கோல சிலாங்கூரில் அமைதியாகவும் சிறப்பாகவும் நடந்தேறியது 15வது பொதுத் தேர்தல் வேட்பு மனு தாக்கல் நிகழ்வு.
செய்தி- சுப்பையா சுப்பரமணியம்








