ஷா ஆலம், அக் 25- ரவாங் சுகாதார கிளினிக்கை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் சாலைகள் மற்றும் கால்வாய்களைத் தரம் உயர்த்துவதற்கு செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) 556,000 வெள்ளியைச் செலவிட்டுள்ளது.அப்பகுதியில் அதிகமான கார் நிறுத்துமிட வசதியை ஏற்படுத்துவதற்கும் பாதசாரிகளுக்கான நடைபாதையை அமைப்பதற்கும் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார்.
சுகாதார கிளினிக் வளாகத்தில் கார் நிறுத்துமிடப் பிரச்னை மிகக் கடுமையாக உள்ளதாகவும் பணியாளர்களும் நோயாளிகளும் தங்கள் வாகனங்களை வெகு தொலைவில் நிறுத்த வேண்டியுள்ளதாகவும் கிளினிக் அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் குறிப்பிட்டார்.
சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டப் பின்னர் அப்பகுதியில் 50 கார்களை நிறுத்துவதற்குரிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதோடு அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
ECONOMY
ரவாங் சுகாதார கிளினிக் கார் நிறுத்துமிடப் பிரச்னைக்கு எம்.பி.எஸ். தீர்வு
25 அக்டோபர் 2022, 12:58 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



