ECONOMY

மலாக்காவில் வெள்ளம்- துயர் துடைப்பு மையங்களில் 38 பேர் அடைக்கலம்

25 அக்டோபர் 2022, 6:15 AM
மலாக்காவில் வெள்ளம்- துயர் துடைப்பு மையங்களில் 38 பேர் அடைக்கலம்

மலாக்கா, அக் 25- வெள்ளம் காரணமாக இன்று காலை 8.00 மணி வரை மலாக்காவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 38 பேர் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். 

நேற்றிரவு 8.00 மணியளவில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் மட்டுமே துயர் துடைப்பு  மையங்களில் தங்கியிருந்ததாக மலாக்கா மாநில பேரிடர் மேலாண்மை செயல்குழுச் செயலகம் கூறியது.

நேற்றிரவு 11.00 மணியளவில் ஆலோர் காஜாவில் புதிதாக திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையத்தில் ஐந்து குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

டுரியான் துங்கால் தேசிய பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண மையத்தில் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் தங்கியுள்ளனர். இவர்கள் கம்போங் புக்கிட் தம்புன், கம்போங் புக்கிட் பாலாய், கம்போங் பெலிம்பிங் டாலாம், கம்போங் பூலாவ் ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களாவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.