ECONOMY

பதினைந்து குற்றப்பதிவுகள் கொண்ட ஆடவரிடம் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

22 அக்டோபர் 2022, 11:33 AM
பதினைந்து குற்றப்பதிவுகள் கொண்ட ஆடவரிடம் 60 கிலோ போதைப் பொருள் பறிமுதல்

கோலாலம்பூர், அக் 22- கம்போங் பாருவிலுள்ள வீடொன்றில் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்ட போலீசார் 15 குற்றப்பதிவுகளைக் கொண்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்ததோடு அவரிடமிருந்து 190,200 வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான சுமார் 60 கிலோ போதைப் பொருள்களைக் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட 57 வயதுடைய அந்த ஆடவரிடமிருந்து 59 கிலோ கெனாபிஸ், 1.01 கிலோ மெத்தம்பெத்தமின் மற்றும் 450 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெலிஹான் யாஹ்யா கூறினார்.

அந்த ஆடவர் போதைப் பொருளை உட்கொண்டிருந்தது அவர் மீது நடத்தப்பட்ட சிறுநீர்  சோதனையில் தெரிய வந்ததாக  கூறிய டெலிஹான், 1985 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் (சிறப்பு தடுப்பு நடவடிக்கைகள்) 6(1) பிரிவின் கீழ் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் 39பி மற்றும் 15(1) பிரிவின் கீழ் விசாரணைக்காக அச்சந்தேகப் பேர்வழி வரும் 28 ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.