சபாக் பெர்ணம், அக் 16- விரைவில் வரவிருக்கும் பொதுத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பக்காத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) கூட்டணி சிலாங்கூரில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறுவதற்கான பிரகாசமான வாய்ப்பு உள்ளது.நேற்றிரவு இங்கு ஜெலாஜா சிலாங்கூர் பென்யாயாங் பயணத் திட்டத்தை தொடங்கிவைத்தபின் செய்தியாளர் சந்திப்பில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த நம்பிக்கையைத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையான இடங்களை ஹராப்பான் கூட்டணிவெல்வதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது என நாங்கள் நம்புகிறோம் என்று சிலாங்கூர் மாநில ஹராப்பான் கூட்டணித் தலைவருமான அவர் கூறினார்.
கடந்த வாரம் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், 15வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கடந்த வாரம் அறிவித்தார்.
அதே சமயம், தங்கள் வசமுள்ள சிலாங்கூர், பினாங்கு, நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் ஆட்சி கலைக்கப்படாது என்று பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த 5 ஆம் தேதி அறிவித்தது.
சிலாங்கூரில் 22 நாடாளுமன்ற இடங்களும் 56 சட்டமன்ற இடங்களும் உள்ளன.
ECONOMY
சிலாங்கூரில் அதிக நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை வெல்ல ஹராப்பான் நம்பிக்கை
16 அக்டோபர் 2022, 9:58 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



