ACTIVITIES AND ADS

இன்று மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

18 செப்டெம்பர் 2022, 4:53 AM
இன்று மேலும் ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், செப் 18- சிலாங்கூர் மாநில அரசின் அத்தியாவசியப் பொருள்

மலிவு விற்பனைத் திட்டம் இன்று பல்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய

ஒன்பது இடங்களில் இன்று நடைபெறுகிறது.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.)

ஏற்பாட்டிலான இந்த ஜூவாலான் ஏசான் ராக்யாட் திட்டம் காலை 9.00

மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தரக் கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி

10.00 வெள்ளிக்கும் பி கிரேட் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும்

கெம்போங் அல்லது செலாயாங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும்

விற்கப்படும்.

இன்று மலிவு விற்பனை நடைபெறும் இடங்கள் வருமாறு-

• பத்து கேவ்ஸ் பொது மைதானம் (கோம்பாக்)

• கம்போங் பாண்டான் டாலாம் (உலு லங்காட்)

• பண்டார் ரிஞ்சிங் செக்சன் 1 மற்றும் 2 (உலு லங்காட்)

• கெலேம்போக் சமார், மண்டலம் 19, தெராத்தாய் (உலு லங்காட்)

• கிளானா ஜெயா எஸ்எஸ்6/3 அங்காடி வணிக வளாகம் (பெட்டாலிங்)

• தாமான் டேசா இண்டா, குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை சதுக்கம்

(கிள்ளான்)

• கம்போங் புக்கிட் செராக்கா பாலாய் எம்.பி.கே.கே. (கிள்ளான்)

• பந்திங், ஜாலான் மெந்தாரி பாசார் மாலாம் மையம் (கோல லங்காட்)

• தஞ்சோங் சிப்பாட் டத்தாரான் அல் உலும் (கோல லங்காட்)

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.