ECONOMY

பிடிஆர்எஸ் இலவச கூடுதல் வகுப்புகள் 25,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள்

16 ஆகஸ்ட் 2022, 9:44 AM
பிடிஆர்எஸ் இலவச கூடுதல் வகுப்புகள் 25,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயனடைவார்கள்

ஷா ஆலம், ஆகஸ்ட் 16: சிலாங்கூர் மக்கள் டியூசன் திட்டம் (பிடிஆர்எஸ்) மூலம் இந்த ஆண்டு 25,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இலவச கூடுதல் வகுப்புகளின் பலனை பெறுவார்கள்.

மேலும் சிறந்த மாணவர்களை உருவாக்கும் மாநில அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியே இந்த வகுப்பு என்று டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி விளக்கினார்.

"கூடுதல் வகுப்புகள் என்பது கல்வியில் சிறந்து விளங்குவதற்கான முயற்சிகள் மற்றும் திட்டங்கள் ஆகும்.

"இந்த ஆண்டு பிடிஆர்எஸ் மூலம் மாநில அரசு 25,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இலவச கூடுதல் வகுப்புகளை வழங்கியுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்காக  RM70 லட்சத்துக்கும் அதிகமாக ஒதுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சிஜில் பெலாஜாரன் மலேசியா (எஸ்பிஎம்) மாணவர்களுக்கு உதவும் திட்டம் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது, இதனால் அதிகமான மக்கள் பலன்களைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

கூடுதலாக, சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) அல்லது எம்பிஐ சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு மதிய உணவுக்கு நிதியுதவி செய்ததாக அமிருடின் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.