ECONOMY

பள்ளி மாணவர்களை தேசபக்தி பாடல் போட்டியில் பங்கேற்க அழைக்கிறது எம்பிஎஸ்ஜே

9 ஆகஸ்ட் 2022, 8:01 AM
பள்ளி மாணவர்களை தேசபக்தி பாடல் போட்டியில் பங்கேற்க அழைக்கிறது எம்பிஎஸ்ஜே

ஷா ஆலம், ஆகஸ்ட் 9: சுபாங் ஜெயா சிட்டி கவுன்சிலின் (எம்பிஎஸ்ஜே) நிர்வாகப் பகுதியில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களை சுதந்திர மாத கொண்டாட்டத்திற்கு தேசபக்தி பாடல் போட்டியில் பங்கேற்க அழைக்கிறது அந்த மாநகர் மன்றம்.

இரண்டு பிரிவுகளிலும் வெற்றியாளருக்கு RM500 ரொக்கப் பரிசு காத்திருக்கிறது என்று மாநகராட்சி  மன்றம் தெரிவித்தது, அதைத் தொடர்ந்து இரண்டாம் இடம் (RM400), மூன்றாவது (RM300) மற்றும் மூன்று ஆறுதல் பரிசுகள் (RM100) வழங்கப்படும்.

எம்பிஎஸ்ஜே அறிவார்ந்த  தலைமுறை தேசபக்தி பாடல் போட்டி 2022, இன்று முதல் ஆகஸ்ட் 23 வரை சுதந்திர உணர்வை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தேசபக்திப் பாடல்களைப் பாடி சிறுவர்களின் திறமையை உயர்த்தி ரொக்கப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை பெறலாம் என முகநூலில் பதிவிட்டுள்ளார்.

போட்டி விதிமுறைகள் மற்றும் பதிவு பற்றிய தகவலுக்கு, பங்கேற்பாளர்கள் எம்பிஎஸ்ஜே இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது காணப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.