ECONOMY

சுபாங் ஜெயா வட்டாரத்தில் 4,066 காக்கைகள் சுடப்பட்டன

7 ஆகஸ்ட் 2022, 9:38 AM
சுபாங் ஜெயா வட்டாரத்தில் 4,066 காக்கைகள் சுடப்பட்டன

ஷா ஆலம், ஆக 7- சுபாங் ஜெயா வட்டாரத்தின் 20 இடங்களில் நேற்று மேற்கொள்ளப்பட்ட காக்கைகளைச் சுடும் நடவடிக்கையில் மொத்தம் 4,066 காக்கைகள் சுடப்பட்டன.

மாநகர் வட்டாரத்தில் காக்கைகளை ஒழிக்கும் நடவடிக்கையை சுபாங் ஜெயா மாநகர் மன்றம் அரச மலேசிய போலீஸ் படையுடன் இணைந்து மேற்கொண்டது.

பொது மக்களுக்கு அசௌகர்யத்தை ஏற்படுத்தி வரும் அந்த பறவையினத்தை ஒழிக்கும் நோக்கினலான இந்த நடவடிக்கை நேற்று காலை 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை மேற்கொள்ளப்பட்டதாக மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும்  வியூக நிர்வாகத் துறையின் துணை இயக்குநர் அஸ்ஃபரிசால் அப்துல் ரஷிட் கூறினார்.

மாநகரின் முக்கியப் பகுதிகளில்  தூய்மையைப் பேணும் முயற்சியின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் 56 பேர் பங்கு கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

காக்கைகளின் எண்ணிக்கை மறுபடியும் உயராமலிருப்பதை உறுதி செய்ய தூய்மையைப் பேணுவதில் குறிப்பாக குப்பைகளை முறையாக அகற்றுவதில் பொது மக்கள் கவனம் செலுத்த வேண்டுமாய் அவர் கேட்டுக் கொண்டார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.