ECONOMY

பயனீட்டாளர் விழிப்புணர்வு விழா பாங்கியில் நாளை நடைபெறும்

30 ஜூலை 2022, 5:48 AM
பயனீட்டாளர் விழிப்புணர்வு விழா பாங்கியில் நாளை நடைபெறும்

ஷா ஆலம், ஜூலை 30- பயனீட்டாளர்கள் தங்கள் உரிமைகளை நன்கு அறிந்திருப்பதை உறுதி செய்யும் நோக்கிலான 2022 ஆம் ஆண்டு பயனீட்டாளர் விழிப்புணர்வு பெருவிழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

பண்டார் பாரு பாங்கி, மார்க்கெட் அருகிலுள்ள திடலில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இந்த விழா நடைபெறும் என்று காஜாங் நகராண்மைக் கழகம் கூறியது.

இந்த நிகழ்வு முதன் முறையாக அடாப் யூத் காராஜ் மற்றும் இஸ்லாமிய சமய விவகாரம், பயனீட்டாளர் மற்றும் ஹலால் தொழில்துறைக்கான ஆட்சிக்குழுவின் ஒத்துழைப்புடன் நடத்தப்படுவதாக நகராண்மை கழகம் பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.

அனைத்து நிலையிலான மக்களுக்கும் பயனீட்டாளரின் உரிமை என்ற தெளிவான விளக்கத்தைத் தரும் நோக்கில் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அது தெரிவித்தது.

இந்த நிகழ்வில் விற்பனைச் சந்தை, பயனீட்டாளர் பிரசார இயக்கம், பயனீட்டாளர் உரை, சுகாதார பரிசோதனை, அதிர்ஷ்டக் குலுக்கு, வர்ணம் தீட்டும் போட்டி, அம்பு எய்தல் போன்ற நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.