ஷா ஆலாம், ஜூலை 17: பார்ட்டி கெ அடிலான் ராக்யாட் உறுப்பினர்கள் கட்சி தலைவருக்கு விசுவாசமாக இருக்க வலியுறுத்தப் படுகிறார்கள், மேலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூட உறுப்பினர்கள் கருத்துக்களை ஏற்கத் தயாராக இருக்கிறார். அன்வாரை விமர்சிக்க முடியாது என்ற குற்றச்சாட்டு தவறானது ஆனால் அது நாகரீகமாக நடக்க வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
“அன்வார் கண்டனத்திற்கோ, விமர்சனத்திற்கோ அப்பால் பட்டவர் அல்ல. இது தவறான பார்வை. ஆனால் ஒழுக்கமான, நாகரீகமான மற்றும் கண்ணியமான முறையில் இருக்க வேண்டும். "தலைவர்களுக்கான மரியாதை வயது, அனுபவம் மற்றும் தியாகம் ஆகியவற்றின் அடிப்படையில் கொடுக்கப்பட வேண்டும். அதில் மரியாதை இருக்க வேண்டும், ”என்று அவர் இன்று 2018/2021 காலத்திற்கான மத்திய தலைமைத்துவ கவுன்சில் கலைக்கப்படுவதற்கு முன்பு அதனை கூறினார்.
இன்று நடைபெற்ற 16 வது கெஅடிலான் தேசிய காங்கிரஸின் மேடையில் பேசிய சைபுதீன், அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து உறுப்பினர்களும் புதிய தலைமையின் கீழ் வலுவான அணியாக செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில், உறுப்பினர்களிடையே ஒற்றுமையை பேண ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கு தற்போதுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த புதிய தலைமையையும் அவர் கேட்டுக்கொண்டார்.
நாம் தோற்றாலும் (அதிகாரத்தில் இல்லை) நமது சகோதரத்துவம் வலுவாகும் இருக்க வேண்டும். உறுப்பினர்கள், தலைவர்கள் மத்தியில் பரஸ்பரம் மரியாதை. ஒழுக்கம், கண்ணியம், நன்னடத்தையை கட்டி காக்க வேண்டும். உள் கட்சி போட்டிகளில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதும். மாற்றுக் கருத்துகள் இருந்தால் தலைவரையும் உதாசீனப் படுத்துவதில் எதிரியை விட உக்கிரமாக செயல்படும் போக்கை சாடினார். கட்சியின் மேம்பாட்டுக்கு இது போன்ற பண்புகளை உறுப்பினர்கள் கைவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.








