HEALTH

கெஅடிலான் மாநாட்டிற்கு வருகை புரிந்த பேராளர் தங்கும் விடுதியில் மரணம்

16 ஜூலை 2022, 10:48 AM
கெஅடிலான் மாநாட்டிற்கு வருகை புரிந்த பேராளர் தங்கும் விடுதியில் மரணம்

ஷா ஆலம், ஜூலை 16- இங்குள்ள ஐ.டி.சி.சி. மாநாட்டு மையத்தில் நடைபெறும் கெஅடிலான் கட்சியின் பேராளர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பேராளர் ஒருவர் நேற்றிரவு தங்கும் விடுதியில் உயிரிழந்தார்.

கெடா மாநிலத்தின் பெர்மோக்கைச் சேர்ந்த ஹஷிம் யூசுப் என்பவரே மரணமடைந்த அந்த பேராளாராவார் என்று கெஅடிலான் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.

இன்று காலை கட்சியின் 16வது பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார். கட்சியின் போராட்டத்தில் தொடக்க காலம் முதல் பங்கு கொண்ட தீவிர இயக்கவாதி அவர் என்றும் சைபுடின் வர்ணித்தார்.

வெகு தொலைவிலிருந்து அதாவது மெர்மோக்கிலிருந்து ஹஷிம் இங்கு வந்துள்ளார். தங்கும் விடுதிக்குச் சென்ற பின்னர் அவர் மரணமடைந்தார். போராட்டத்தின் போதே அவர் தனது இன்னுயிரை விட்டுள்ளார் என்று சைபுடின் மேலும் சொன்னார்.

எனினும், ஹஷிமின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.