ECONOMY

ஜூன் 19 ஆம் தேதி அம்பாங்கில் மக்களுக்கு புதிய உதவி திட்டங்களின் அறிமுக  உலா

17 ஜூன் 2022, 8:36 AM
ஜூன் 19 ஆம் தேதி அம்பாங்கில் மக்களுக்கு புதிய உதவி திட்டங்களின் அறிமுக  உலா

ஷா ஆலம், 17 ஜூன்: மக்களுக்கு பல்வேறு புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட முயற்சிகளை அறிமுகப்படுத்தும் சிலாங்கூர் பென்யாயாங் திட்டம் இந்த ஞாயிற்றுக்கிழமை அம்பாங்கில்  உள்ள தாமான் கோசாஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

காலை 8.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ள பெடுலி ராக்யாட் (ஐ.பி.ஆர்.) திட்டத்தை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடக்கி வைப்பார்.

இதே திட்டம் ஜூன் 25 அன்று கோலா லங்காட்டில் உள்ள டத்தாரான் பந்தாய் மோரிப்பிலும், பிறகு மாநிலத்தில் உள்ள மற்ற மாவட்டங்களிலும் தொடரும்.

அம்பாங்கில் நடைபெறும் நிகழ்வில், விவசாயத் திட்டம் மற்றும் தொழில் முனைவோர் மானியங்களை வழங்குவதோடு கூடுதலாக ரூமா இடாமான் திட்டத்தில் வீடு வாங்கும் 10 பேருக்கு அங்கீகாரக் கடிதங்களையும் அமிருடின் வழங்குவார்.

நிகழ்ச்சியில் கலைஞர்களின் இன்னிசைப் படைப்புகள், ஏரோபிக், சமையல் போட்டி, மலர் அலங்காரம், மக்கள் விளையாட்டு, மின்-விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெறும்.

எட்டு மற்றும் 10 வயதுக்குட்பட்டோருக்கு கால்பந்து போட்டிகள் மற்றும் RM30 முதல் RM500  வரையிலான பணப் பரிசு சலுகைகளுடன் வண்ணம் தீட்டும் போட்டியும் இருக்கும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.