HEALTH

12 முதல் 17 வயதினரில் 91.2 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

14 மார்ச் 2022, 3:29 AM
12 முதல் 17 வயதினரில் 91.2 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், மார்ச் 14: நாட்டில் 12 முதல் 17 வயதுடைய பதின்ம வயதினரில் மொத்தம் 2,837,197 பேர் அல்லது 91.2 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 2,937,206 பேர் அல்லது 94.4 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

ஐந்து முதல் 11 வயது வரையிலான சிறார்களில், மொத்தம் 11 லட்சத்து 67 ஆயிரத்து 19 பேர் அல்லது 32.9 விழுக்காட்டினர் சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், வயது வந்தோரில் மொத்தம் 1 கோடியே 52 லட்சத்து 80 ஆயிரத்து 702 பேர் அல்லது 64.9 விழுக்காட்டினர் கோவிட்-19 பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 34 ஆயிரத்து 957 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் மற்றும் 2 கோடியே 32 லட்சத்து 11 ஆயிரத்து 514 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

தினசரித் தடுப்பூசிகள் நேற்று 23,489 முதல் டோஸ்கள், 1,349 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 20,187 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 45,025 டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின்  கீழ் வழங்கப்பட்ட மொத்தத் தடுப்பூசியின் எண்ணிக்கை 6 கோடியே 81 லட்சத்து 59 ஆயிரத்து 756 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 87 இறப்புகள் பதிவாகியுள்ளன.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.