HEALTH

மந்திரி புசாருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- மார்ச் 8 இல் பணிக்குத் திரும்புவார்

2 மார்ச் 2022, 3:39 AM
மந்திரி புசாருக்குக் கோவிட்-19 நோய்த் தொற்று- மார்ச் 8 இல் பணிக்குத் திரும்புவார்

ஷா ஆலம், மார்ச் 2- மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நேற்று நடத்தப்பட்ட ஆர்.டி. -பி.சி.ஆர். சோதனையில் இந்நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது .

சுகாதார அமைச்சின் விதிமுறைப்படி அவர் ஏழு நாட்களுக்குத் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார் என்று பத்திரிகை செயலகம் கூறியது. வரும் மார்ச் 8 ஆம் தேதி அவர் மீண்டும் பணிக்குத் திரும்புவார்.

இந்நோய் தொற்று பாதிப்பால் ஏற்பட்ட இடையூறுகளுக்கு அமிருடின் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். கடந்த 48 மணி நேரத்தில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கோவிட்-19 சோதனையை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மந்திரி புசார், அவரின் குடும்பத்தினர் மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அந்த அறிக்கை கூறியது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.