ECONOMY

நேற்று வரை 53,825 பேருக்கு வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டது

25 பிப்ரவரி 2022, 9:38 AM
நேற்று வரை 53,825 பேருக்கு வெள்ள உதவி நிதி வழங்கப்பட்டது

ஷா ஆலம், பிப் 25- பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் நேற்று வரை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கிள்ளான் வட்டாரத்தைச் சேர்ந்த 53,825 பேர் 1,000 வெள்ளி உதவி நிதியைப் பெற்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் நேற்று வரை மாநில அரசின் இந்த உதவி நிதியைப் பெற்றவர்கள் எண்ணிக்கை இதுவாகும் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.

பண்டமாரான் விளையாட்டுத் தொகுதி, ஜாலான்  காப்பார் டி.என்.பி. மண்டபம், கிள்ளான் நில மற்றும் மாவட்ட அலுவலகத்தின் பல்நோக்கு மண்டபம் ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் நிதி பகிர்ந்தளிப்பின் போது மேலும் 7,600 பேர் நிதியைப் பெறுவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இன்றுடன் இந்த நிதி வழங்கும் நிகழ்வு முடிவுக்கு வந்துவிடவில்லை. நிதியை இன்னும் பெறாதவர்களுக்காக நில மற்றும் மாவட்ட அலுவலகத்தில் சிறப்பு நிதியளிப்பு நிகழ்வு நடத்தப்படும் என்றார் அவர்.

தங்கள் வங்கி கணக்கிற்கு உதவி நிதி  மாற்றப்படுவதற்கு ஏதுவாக வங்கி கணக்கு எண்களைச் சேகரிப்பதன் மூலம் விண்ணப்பத்தைப் புதுப்பித்துக் கொள்ளும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.