MEDIA STATEMENT

இலவசம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  ஏற்பாடு

11 பிப்ரவரி 2022, 2:52 AM
இலவசம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்  ஏற்பாடு

ஷா ஆலம், பிப் 11: கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச பொருள் சந்தையை இந்த ஞாயிற்றுக்கிழமை 13- 2- 2022 ல் ஏற்பாடு செய்துள்ளது.

மலேசியாவின் (லேவ்ஜய் அசோசியேஷன்) தனது சேவை மையத்துடன்  இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சி, கமுனிங் மண்டபத்தில், ஷா ஆலம், செக்சன் 25ல் காலை 10 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும் என்று  வீ.கணபதிராவ் கூறினார்.

தனிநபர்கள், குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ற பல்வேறு வகையான பொருட்களை அனைவரும் இலவசமாக  எடுத்து செல்லலாம்.

பெண்கள், ஆண்கள், குழந்தைகளின் ஆடைகள், காலணிகள், பைகள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தகங்கள், மின்சாதனங்கள் மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்கள் போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.

சந்தையில் (பஜாரில்) கலந்து கொள்பவர்கள் முகக்கவரியை அணிந்து கொண்டு மற்றும் தேர்ந்தெடுக்கும் பொருட்களை நிரப்ப பைகளை எடுத்து வருமாறு சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கான ஆட்சிக்குழு உறுப்பினர்  கேட்டுக் கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.