ECONOMY

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக ஜோஹாரி அனுவார் பதவியேற்றார்

9 பிப்ரவரி 2022, 9:24 AM
சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக ஜோஹாரி அனுவார் பதவியேற்றார்

ஷா ஆலம், பிப் 9- சுபாங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டாராக டத்தோ ஜோஹாரி அனுவார் நியமிக்கப்பட்டுள்ளார். சுபாங் ஜெயா மாநகர் மன்ற தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற சடங்கொன்றில் அவர் இப்பதவியை ஏற்றுக் கொண்டார்.

தற்போது கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நோராய்னி ரோஸ்லானுக்கு பதிலாக ஜோஹாரி  இப்பதவிக்கு  நியமனம் பெற்றுள்ளார். இம்மாதம் 3 ஆம் தேதி முதல் அவரது நியமனம் அமலுக்கு வருகிறது.

48 வயதான ஜோஹாரி, ஜெர்மனி, பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நகர் நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டமும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வர்த்தக கல்வித் துறையில் டிப்ளோமாவும் இந்தான் எனப்படும் தேசிய பொது நிர்வாக கழகத்தில் பொது நிர்வாகத் துறையில் டிப்ளோமாவும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 2020 முதல் பெட்டாலிங் மாவட்ட மற்றும் நில அதிகாரியாக பணியாற்றி வந்தார். பொதுச்சேவைத் துறையில் 22 ஆண்டு கால அனுபவம் கொண்ட ஜோஹாரி சுபாங் ஜெயா மாநகர் மன்றத்திற்கு நியமனம் பெற்றுள்ள இரண்டாவது டத்தோ பண்டார் ஆவார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.